Skip Navigation

DVD Ilustrado Multilíngue

The Biology of Prenatal Development




பிறப்பிற்கு முந்தைய கருவின் வளர்ச்சி

.தமி [Tamil]


 

Baixar Versão em PDF  O Que é PDF?
 

Capítulo 1   Introdução

ஒற்றை உயிரணு மனித சைகோட்டானது, சக்தி வாய்ந்த ஒரு செய்கையின் மூலம் நூறு ட்ரில்லியன் உயிரணுக்களைக் கொண்ட மனித உருவாக வடிவெடுப்பது இயற்கையில் நடக்கும் அற்புதங்களிலேயே குறிப்பிடத்தக்கதாகும்.

ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின்படி அன்றாட நடவடிக்கைகளை செய்யும் வளர்ச்சியடைந்த மனித உடல் கருவிலேயே நிலைப்படுத்தப்படுகிறது - அதுவும் பிறப்பிற்கு வெகு காலத்திற்கு முன்னமே.

பிறப்பிற்கு முந்தைய வளர்ச்சிக் காலம் வளர்ச்சிக்கு கரு தயாராகும் நிலை என்று அறிந்து கொள்ளப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் வளரும் மனிதக் கருவானது உடல் அமைப்புகளைப் பெற்று, பிறப்பிற்குப் பிறகு தேவையான பல திறமைகளைப் பெறுகிறது.

Capítulo 2   Terminologia

மனிதக் கருவின் கர்ப்பக்காலம் சராசரியாக 38 வாரங்கள் ஆகும் இது கரு உருவான காலம் முதல், பிறப்பு வரை உள்ள காலத்தைக் குறிக்கிறது.

கரு உருவான முதல் 8 வாரங்களில், வளர்ச்சியடையும் கருவை எம்பிரியோ(கரு) என்கிறோம் இதன் பொருள் "உள் வளர்தல்" என்பதாகும். எம்பிரியோனிக் காலகட்டம் எனப்படும் இந்த காலகட்டத்தில், முக்கியமான உடல் அமைப்புகள் உருவாகின்றன.

எட்டாம் வார முடிவிலிருந்து பிறப்பு வரை, "வளரும் மனிதக் கருவை ஃபீடஸ்(சிசு) என்கிறோம்," இதன் பொருள் "இனி வரப்போகும் சந்ததி" என்பதாகும். ஃபீடல் காலகட்டம் எனப்படும் இந்த காலகட்டத்தில், உடல் பெரிதாக வளர்ச்சியடைவதுடன் உடல் அமைப்புகளும் செயல்படத் தொடங்குகின்றன.

இத்தொகுப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் கரு மற்றும் சிசுவின் காலம் கருத்தரித்தது முதல் உள்ள காலத்தைக் குறிக்கிறது.