| |
O Período Fetal (8 semanas até o Nascimento)
Capítulo 37 9 Semanas: Engole, Suspira e se Estica
|
| |
| சிசுவின் காலகட்டம் பிறப்பு வரை
தொடர்கிறது.
|
| 9 வாரங்களில் கை கட்டை விரல் சூப்புதல்
தொடங்குகிறது
சிசு ஆம்னியாட்டிக் திரவத்தை குடிக்கிறது.
|
| சிசு ஒரு பொருளைப் பற்றுதல்,
தலையை முன்னும் பின்னும் அசைத்தல்,
தாடையை திறந்து மூடுதல், நாக்கை ந்ட்டுதல்,
பெருமூச்சு விடுதல் ஆகியவற்றை செய்கிறது.
முகத்தில், உள்ளங்கையில் மற்றும்
உள்ளங்காலில் உள்ள நரம்புகளால்
மிருதுவான தொடுதலை உணர முடியும்.
"உள்ளங்கால்களை மிருதுவாகத் தொட்டால்"
சிசுவானது இடையையும் முட்டியையும் மடக்கி
கால் விரல்களையும் மடித்துக் கொள்கிறது.
|
| இந்தக் காலகட்டத்தில் கண் இமைகள்
முழுவதுமாக மூடிய நிலையில் உள்ளன.
|
| குரல் வளையில் குரல் பந்தகங்கள்
தோன்றுவது,
குரல் தசை நார்கள் வளர்வதைக்
குறிக்கின்றன.
|
| பெண் சிசுக்களில், கர்பப்பையை
அடையாளம் காண் முடியும்.
முழு வளர்ச்சியடையாத
இனப்பெருக்க செல்களான ஊகோனியா
கருப்பைக்குள் வளரத் தொடங்குகின்றன.
ஆண், பெண் என்பதைக் குறிக்கும்
புறப்பாலுறுப்புகள் தோன்றுகின்றன.
|
Capítulo 38 10 Semanas: Revira os olhos e Boceja, Unhas e Impressões Digitais
|
| |
| 9 முதல் 10 வாரங்களுக்குள் நிகழும்
திடீர் வளர்ச்சி
உடல் எடையை 75%-க்கும் மேல்
அதிகரிக்கச் செய்கிறது.
|
| 10 வாரங்களில், மேற்புற கண்ணிமையின்
தூண்டுதலால்
கண் கீழ்நோக்கி சுழல்கிறது.
சிசு கொட்டாவி விடுவதுடன், அடிக்கடி
வாயைத் திறந்து மூடுகிறது.
|
| அநேக சிசுக்கள் வலதுகைக் கட்டைவிரலை
சப்புகின்றன.
தொப்புள் கொடியினுள் இருக்கும்
குடலின் சில பகுதிகள்
வயிற்றுப் பகுதிக்குள் வரத் தொடங்குகின்றன.
|
| அநேக எலும்புகளில் ஆஸிஃபிக்கேஷன்
நடைபெறுகிறது.
|
| கை மற்றும் கால் நகங்கள்
வளரத் தொடங்குகின்றன.
|
| கருவுற்ற 10 வாரங்களில் தனிப்பட்ட கைரேகைகள்
தோன்றுகின்றன.
இவை வாழ்நாள் முழுவதும் தனிப்பட்ட
அடையாளக் குறியாகப் பயன்படுத்தப்படுகிறது.
|
Capítulo 39 11 Semanas: Absorve Glicose e Água
|
| |
| 11 வாரங்களில்
மூக்கும் உதடுகளும் முழுவதுமாக
உருவாகின்றன.
உடலின் மற்ற பாகங்களைப் போன்றே,
அவற்றின் தோற்றம்
மனித் வாழ்க்கை சுழற்சியின்
ஒவ்வொரு நிலையிலும் மாறுகிறது.
|
| குடலானது சிசு விழுங்கிய க்ளூக்கோஸ்
மற்றும் தண்ணீரை கிரகிக்கத் தொடங்குகிறது.
|
| பாலினமானது
கருவுறும் போதே அறியப்பட்டாலும்,
இக்கட்டத்தில், வெளிப்புற பாலுறுப்புகள்
ஆண் அல்லது பெண் என்ற வேற்றுமையை
உணர்த்துகின்றன.
|