Skip Navigation

DVD Ilustrado Multilíngue

The Biology of Prenatal Development




பிறப்பிற்கு முந்தைய கருவின் வளர்ச்சி

.தமி [Tamil]


 

Baixar Versão em PDF  O Que é PDF?
 

Capítulo 40   3 a 4 Meses (12 a 16 Semanas): Papilas Gustativas, Movimento de Mandíbula, Reflexo de Sucção, Percepção dos Primeiros Movimentos do Feto

11 முதல் 12 வாரங்களுக்குள், சிசுவின் எடை ஏறத்தாழ 60% அதிகரிக்கிறது.

12 வாரங்கள் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள், அல்லது ட்ரைமெஸ்டர் முடிவடைந்ததைக் குறிக்கிறது.

இக்கட்டத்தில் வாயினுள் தனிப்பட்ட சுவையை உணரும் அமைப்புகள் உருவாகின்றன.
பிறப்பின் போது, இவை நாக்கிலும் வாயின் மேற்புறத்திலும் மட்டுமே காணப்படும்.

குடல் அசைவுகள் 12 வாரங்களில் தொடங்கி இன்னுமொரு 6 வாரங்கள் தொடர்கின்றன.

சிசு மற்றும் பிறந்த குழந்தையின் மலக்குடலிலிருந்து வெளிவருவது மிகோனியம் எனப்படும். இது செரிமான என்ஸைம்கள், புரோட்டீன்கள், மற்றும் உணவுப்பாதையினால் உதிர்க்கப்பட்ட இறந்த செல்கள் ஆகியவற்றால் ஆனது.

12 வாரங்களில், கையின் நீளம் உடலின் அளவுக்கு ஏற்ற விகிதத்தில் அமைகிறது. கால்கள் சரிவிகிதத்தில் அமைய வெகு நாட்கள் ஆகின்றன.

இக்கட்டத்தில் முதுகு மற்றும் உச்சந்தலையைத் தவிற, சிசுவின் மற்ற உடற்பாகங்கள் தொடுதலுக்குத் தக்கவாறு இயங்குகின்றன.

பாலின வளர்ச்சியில் முதன்முறையாக வேறுபாடு தோன்றுகிறது. உதாரணமாக, பெண் சிசுக்களின் தாடை இயக்கங்கள் ஆண் சிசுக்களை விட அதிக அளவில் இயங்குகின்றன.

வாயின் அருகேயான தொடுதலுக்கு முன்பு பின்வாங்கிய சிசு, இப்போது அதற்கு நேற்மாறாக தூண்டுதலை நோக்கித் திரும்பி, வாயைத் திறக்கிறது. "ரூட்டிங் ரிஃப்ளெக்ஸ்" எனப்படும் இச்செய்கை பிறப்பிற்குப் பின்னும் தொடர்ந்து, பிறந்த குழந்தை பாலுண்ணும் போது தாயின் மார்புக்காம்பை கண்டுகொள்ள உதவுகிறது.

முகம் முதிர்ச்சியடைந்து கன்னங்களில் கொழுப்புச்சத்து நிறைந்து பல் வளர்ச்சி தொடங்குகிறது.

15 வாரங்களில், இரத்த அணுக்களை உருவாக்கும் ஸ்டெம் செல்கள் தோன்றி எலும்பு மஜ்ஜையில் பெருகத் தொடங்குகின்றன. பெருவாரியான இரத்த அணுக்கள் இங்கு உருவாகின்றன.

6-வார கருவில் சிறிதளவு அசைவு தோன்றினாலும், கர்ப்பமுற்ற ஒரு பெண் சிசுவின் அசைவை முதன்முதலில் உணர்வது 14 முதல் 18 வாரங்களுக்குள் தான். இச்செய்கை க்விக்கெனிங் எனப்படுகிறது.