| |
Capítulo 41 4 a 5 Meses (16 a 20 Semanas): Resposta ao Estresse, Verniz Caseoso, Ritmos Circadianos
|
| |
| 16 வாரங்களில்,
சிசுவின் வயிற்றுப் பகுதிக்குள் செலுத்தப்படும்
ஒரு ஊசி
ஒரு ஹார்மோனல் அழுத்தத்தைத்
தூண்டுகிறது.
இதன் விளைவாக நாரட்ரினாலின்,
அல்லது நாரெப்பினெஃப்ரைன் ஆகியவை
வெளியிடப்பட்டு இரத்தத்தில் கலக்கின்றன.
இத்தகைய செய்கைகளுக்கு இதே மாதிரியான
எதிர்வினைச் செயலை
பிறந்த குழந்தை மற்றும் மனிதர்களில்
காணலாம்.
|
| சுவாச அமைப்பில்,
பிராங்கயல் அமைப்பு அநேகமாக
முற்றுப்பெற்றிருக்கிறது.
|
| வெர்னிக்ஸ் கேஸோஸா என்ற பாதுகாப்பான
ஒரு வெள்ளைத் திரவம்,
சிசுவின் மீது படர்ந்திருக்கிறது.
இது சிசுவின் தோலை
ஆம்னியாட்டிக் திரவத்தின் எரிச்சலூட்டும்
விளைவுகளில் இருந்து காக்கிறது.
|
| 19 வாரங்கள் முதல் சிசுவின் அசைவு,
சுவாசம்,
மற்றும் இதயத் துடிப்பு
தினசரி சுழற்சியைத் தொடங்குகிறது.
இது சிர்காடியன் ரிதம் எனப்படுகிறது.
|
Capítulo 42 6 a 7 Meses (24 a 28 Semanas): Reflexo Cócleo-Palpebral e de Sobressalto; Pupilas Respondem à Luz; Olfato e Paladar
|
| |
| 20 வாரங்களில் காக்லியா எனப்படும்
கேள்வி உறுப்பு,
முழு வளர்ச்சி அளவை அடைகிறது.
இது முற்றிலும் வளர்ச்சியடைந்த
உட்காதுக்குள் அமைந்திருக்கிறது.
இந்தக் கட்டத்திலிருந்து,
சிசு பல்வேறு சத்தங்களுக்கு பதில் வினை
புரிகிறது.
|
| தலையின் மேல்பாகத்தில் முடி வளரத்
தொடங்குகிறது.
அனைத்து தோல் அடுக்குகளும் அமைப்புகளும்
உள்ளன.
இதில் முடி உறைகளும், சுரப்பிகளும்
அடக்கம்.
|
| கருவுற்ற 21 முதல் 22 வாரங்களுக்குள்,
நுரையீரல் காற்றை சுவாசிக்கும் திறமையை
பெறுகிறது.
இது சாத்தியமான சூழ்நிலை என்று
கருதப்படுகிறது
ஏனெனில் கருவுக்கு வெளியேயும் உயிர்
வாழ்வது
சில சிசுக்களுக்கு ஏதுவாகிறது.
மருத்துவத் துறையின் முன்னேற்றங்கள்
தமது காலத்திற்கு முன்பே பிறந்த சிசுக்கள்
வாழ வழி செய்கின்றன.
|