| |
Desenvolvimento Embrionário: 4 a 6 Semanas
Capítulo 11 4 Semanas: Líquido Amniótico
|
| |
| 4 வாரங்களில்
தெளிவான ஆம்னியான், திரவத்தைக்
கொண்ட பையில்
கருவைச் சுற்றி உருவாகிறது.
இத்திரவம்,
ஆம்னியாட்டிக் திரவம் என்றழைக்கப்பட்டு
காயங்களிலிருந்து கருவுக்குப்
பாதுகாப்பு அளிக்கிறது.
|
Capítulo 12 O Coração em Ação
|
| |
| இதயத் துடிப்பு சராசரியாக ஒரு நிமிடத்திற்கு
113 முறை ஏற்படுகிறது.
இதயம் நிறம் மாறுவதை கவனியுங்கள்.
இது ஒவ்வொரு துடிப்பின் போதும்
இரத்தம் அறைகளின் உட்புகுந்து
வெளிவரும் போது நிகழ்கிறது.
பிறப்பிற்கு முன் இதயத்துடிப்பு ஏறத்தாழ
54 மில்லியன் முறை ஏற்படுகிறது,
மற்றும் 3.2 பில்லியன் முறைக்கு மேல்
80-வருட வாழ்வில்.
|
Capítulo 13 O Crescimento do Cérebro
|
| |
| மூளை வேகமாக வளர்வதை மாறும் அதன்
தோற்றத்தைக் கொண்டு அறியலாம்.
மூளையின் முற்பகுதி,
நடுப்பகுதி,
மற்றும் பிற்பகுதியில் இதைக் காணலாம்.
|
Capítulo 14 Brotos dos Membros
|
| |
| கை மற்றும் காலின் வளர்ச்சி தொடங்குகிறது.
4 வாரங்களுக்குள்ளாக
இவ்வயவங்களின் முலைகள் தெரிகின்றன
|
| இந்தக் கட்டத்தில் தோல் மிகவும்
மெல்லிதாக உள்ளது
ஆனெனில் அதன் தடிமன் ஒரு செல் மட்டுமே.
தோலின் தடிமன் அதிகரிக்கும் போது,
அது மெல்லிய தன்மையை இழக்கிறது.
இதனால் உட்பாகங்களின் வளர்ச்சியை
இன்னும் ஒரு மாததிற்கு மட்டுமே
காண முடியும்.
|
Capítulo 15 5 Semanas: Hemisférios Cerebrais
|
| |
| 4 முதல் 5 வாரங்களுக்குள்,
மூளை வேகமாக வளர்ந்து
5 தனிப்பட்ட பகுதிகளாக பிரிகின்றன.
தலையின் அளவு கருவின் மொத்த அளவில்
மூன்றில் ஒரு பகுதியாகும்.
மூளையின் அரைக்கோளம் தோன்றி,
மெல்ல மெல்ல மூளையின் பெரும்பகுதியாக
மாறுகிறது.
மூளையின் அரைக்கோளத்தால்
கட்டுப்படுத்தப்படும் செயல்களுள்
சிந்தனை, கல்வி,
நினைவாற்றல், பேச்சு, பார்வை,
கேட்டல், தானாக அசைதல்,
மற்றும் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆற்றல்
ஆகியவை அடங்கும்.
|
Capítulo 16 Vias Respiratórias Principais
|
| |
| சுவாச அமைப்பில்,
வலது மற்றும் இடது பக்க முதன்மை
பிராங்க்கை உள்ளன.
இவை
மூச்சுக்குழலை
நுரையீரலுடன் இணைக்கின்றன.
|
Capítulo 17 Fígado e Rins
|
| |
| வயிற்றுப்பகுதியை அடைக்கும் ஈரலை
கவனியுங்கள்
இது துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தின்
அருகில் உள்ளது.
5 வாரங்களில் நிரந்தரமான சிறுநீரகங்கள்
தோன்றுகின்றன.
|
Capítulo 18 Saco Vitelino e Células Germinativas
|
| |
| கரு உறை இனப்பெருக்க செல்களைக்
கொண்டுள்ளது.
இவை ஜெர்ம் செல்கள் எனப்படும்.
5 வாரங்களில்
இவை இனப்பெருக்க உறுப்புகளுக்கு
இடம் பெயர்கின்றன.
இனப்பெருக்க உறுப்புகள் சிறுநீரகத்திற்கு
அருகில் உள்ளன.
|
Capítulo 19 Placas da Mão e Cartilagem
|
| |
| 5 வாரங்களில்,
கருவின் கைத்தட்டு உருவாகிறது.
5 ½ வாரங்களில் குருத்தெலும்பு உருவாகத்
தொடங்குகிறது.
இங்கு நாம் காண்பது 5 வாரங்கள் 6 நாட்களான
கருவின்
இடப்பக்கக் கைத்தட்டு மற்றும் மணிக்கட்டு.
|