| |
Desenvolvimento Embrionário: 6 a 8 Semanas
Capítulo 20 6 Semanas: Movimento e Sensação
|
| |
| 6 வாரங்களில் மூளையின் அரைகோளங்கள்
மூளையின் மற்ற பகுதிகளை விட வேகமாக
வளர்கின்றன.
கரு தன்னிச்சையான மற்றும் அனிச்சையான
அசைவுகளை
தொடங்குகிறது.
இத்தகைய அசைவுகள்
நரம்புத் தசைகளின் வளர்ச்சிக்கு மிகவும்
அவசியமாகும்.
|
| வாய்ப்பகுதியில் தொடுதல் கருவை
அனிச்சையாக தலையை உள்ளுக்கு
இழுக்கச் செய்கிறது.
|
Capítulo 21 A Orelha Externa e a Formação de Célula Sanguínea
|
| |
| வெளிப்புறக் காது உருவாகத் தொடங்குகிறது.
|
| 6 வாரங்களில்,
ஈரலில் உள்ள லிம்ஃபோஸைட்டுகளில்
இரத்த அணுக்கள் உருவாகின்றன.
இந்த வெள்ளை இரத்த அணுக்கள்
நோய் எதிர்ப்பு அமைப்பின் வளர்ச்சியில்
முக்கிய பங்கு வகிக்கிறது.
|
Capítulo 22 O Diafragma e os Intestinos
|
| உதரவிதானம்,
சுவாசதிற்கு பயன்படும் முக்கிய தசை,
6 வாரங்களில் உருவாகிறது.
|
| குடலின் ஒரு பகுதி தற்காலிகமாக
தொப்புள் கொடிக்குள் செல்கிறது.
உடலியல் ஹெர்னியேஷன் எனப்படும்
இச்செயல்,
வயிற்றுப் பகுதியில் வளரும் மற்ற உறுப்புகளுக்கு
இடமளிக்கிறது.
|
Capítulo 23 Placas da Mão e Ondas Cerebrais
|
| |
| 6 வாரங்களில் கைத்தட்டுகள் தட்டை உருவம்
பெறுகின்றன.
|
| 6 வாரங்கள் மற்றும் 2 நாட்களில் மூளையின்
அலைவரிசைகள் பதிவு செய்யப்படுள்ளன.
|
Capítulo 24 Formação do Mamilo
|
| |
| உடலின் பக்கவாட்டில் மார்புக்காம்புகள்
தோன்றுகின்றன
இவை பின்பு தமது நிரந்தர இடமான
மார்பின் முன்புறத்தை அடைகின்றன.
|
Capítulo 25 Desenvolvimento dos Membros
|
| |
| 6 ½ வாரங்களில் முழங்கைகள் தோன்றி,
விரல்கள் விரியத் தொடங்கி,
கை அசைவுகள் காணப்படுகின்றன.
|
| ஆஸிஃபிக்கேஷன் எனப்படும் எலும்புகள்
உருவாகும் செய்கை
க்ளாவிக்கிள்
அல்லது காறை எலும்பு,
மேல் மற்றும் கீழ் தாடை எலும்புகள்
உருவாவதில் தொடங்குகிறது.
|
Capítulo 26 7 Semanas: Soluços e Resposta a Susto
|
| |
| 7 வாரங்களில் விக்கல்கள் தோன்றுகின்றன.
திடுக்கிடும் இயக்கங்களுடன் கூடிய கால்
அசைவுகளை இப்போது காணலாம்.
|
Capítulo 27 O Coração Desenvolvido
|
| |
| 4 அறைகளுடன் கூடிய இதயம் முழுமையான
வளர்ச்சி அடைகிறது.
இதயம் இப்போது சராசரியாக நிமிடத்திற்கு
167 முறை துடிக்கிறது.
7 ½ வாரங்களில் பதிக்கப்பட்ட இதயத்தின்
மின் நிகழ்வுகள்
தோற்றுவிக்கும் அலை அமைப்பு
வளர்ந்த மனிதனின் அமைப்பை ஒத்து இருக்கிறது.
|
Capítulo 28 Ovários e Olhos
|
| |
| 7 வாரங்களில் பெண் கருவில் முட்டைகள்
காணப்படுகின்றன.
|
| 7 ½ வாரங்களில் கண்ணின் வண்ண விழித்திரை
காணப்படுகிறது.
கண் இமைகள் வேகமாக வளர்கின்றன.
|
Capítulo 29 Dedos das Mãos e dos Pés
|
| |
| கைவிரல்கள் பிரிந்து
கால்விரல்கள் அடிவாரத்தில் இணைந்துள்ளன.
|
| கைகளை இப்போது அருகருகே
கொண்டுவர முடியும்,
கால்களையும்.
கால் முட்டிகள் காணப்படுகின்றன.
|